Monday, July 4, 2011

விஜய் டிவி - பிலிம்பேர் விருதுகள்... சிம்பு பாய்ச்சல்!

சமீபத்தில் வழங்கப்பட்ட விஜய் டிவி மற்றும் பிலிம்பேர் விருதுகள் குறித்து கடும் விமர்சனம் செய்துள்ளார் நடிகர் சிம்பு.

விஜய் டிவி சார்பில் ஆண்டுதோறும் வழங்கப்படும் விஜய் விருதுகள் விழா சமீபத்தில் சென்னையில் நடந்தது. 

சிறந்த நடிகர்களாக விக்ரம், சூர்யா போன்றவர்களைத் தேர்வு செய்து விருது கொடுத்தனர் (ரஜினியை மக்களால் அதிகம் விரும்பப்படும் நடிகர் மற்றும் சிறந்த வில்லன் நடிகராக மக்கள் நேரடியாக வாக்களித்து தேர்வு செய்தனர்). 

அதேபோல பிலிம்பேர் விருது வழங்கும் நிகழ்ச்சி இரு தினங்களுக்கு முன் நடந்தது. இந்த விழாவிலும் சிறந்த நடிகராக விக்ரம், நடிகையாக அஞ்சலி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டிருந்தனர். வேறு பிரிவுகளில் பல கலைஞர்களும் விருது பெற்றிருந்தனர்.

ஆனால் இந்த விழாக்களில் விருதுகள் தனிநபர் தேர்வாக மட்டுமே அமைந்துவிட்டது என்பதைக் குறிப்பிடும் வகையில் சிம்பு தனது பேஸ்புக்கில்,"விஜய் டிவி - பிலிம்பேர் விருதுகளா அல்லது மகேந்திரன் - தங்கதுரை விருதுகளா என்றே தெரியவில்லை" என்று குறிப்பிட்டுள்ளார்.

மகேந்திரன் விஜய் டிவி பொறுப்பாளர், தங்கதுரை பிலிம்பேர் (தெற்கு) பொறுப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது. பல முன்னணி நட்சத்திரங்களின் மேலாளராகவும் இருப்பவர் தங்கதுரை.

சிம்பு நடித்த விண்ணைத்தாண்டி வருவாயா படத்துக்கு விஜய் மற்றும் பிலிம்பேர் விருதுகள் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

 
koffee with anu super singer jodi no 1 anu alavum bayam illai celebrating kamal's 50 vijay tv vanga pesalam kallikaattu pallkoodam maharani vijay awards vpl en peyar meenakshi yuvan vijay tv anchors kings of comedy